மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு நவீன டிஜிட்டல் வாக்கி-டாக்கி

திண்டுக்கல் மாவட்ட போலீசாருக்கு நவீன டிஜிட்டல் வாக்கி-டாக்கிகள் வந்தன.

தினத்தந்தி

திண்டுக்கல்:

போலீசார் பணியில் ஈடுபடும் போது சக போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிப்பதற்கு வசதியாக வாக்கி-டாக்கி பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல் பணி தொடர்பான அறிவுரைகளை வாக்கி-டாக்கி மூலமாகவே உயர் அதிகாரிகள் கூறுவார்கள்.

இந்த வாக்கி-டாக்கிகள் அனலாக் முறையில் செயல்படும். இதனால் சில நேரம் சரியாக சிக்னல் கிடைக்காமல், தகவல்களை பரிமாற முடியாத நிலை ஏற்படும்.

இதை தவிர்க்கும் வகையில் தமிழக போலீசாருக்கு நவீன டிஜிட்டல் வாக்கி-டாக்கி வழங்கப்படுகிறது. இதன்மூலம் அனைத்து இடங்களில் இருந்தும் போலீசார், சக போலீசாருடன் தொடர்பு கொள்ளலாம். இதில் குழுவாக உரையாடும் வசதியும் உள்ளது.

இதையடுத்து அவை தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 15 டிஜிட்டல் வாக்கி-டாக்கிகள் வந்தன.

அவை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக போலீசாருக்கு வழங்கப்பட உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து