மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள்- லாரி மோதல்; 2 வாலிபர்கள் பலி

பெருந்துறை அருகே மோட்டார்சைக்கிள், லாரி மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர்.

தினத்தந்தி

பெருந்துறை,

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பச்சாக்கவுண்டன்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகன் ராமசாமி (வயது 20). ஆட்டோ டிரைவர்.

இதேபோல் தலையம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் திவாகரன் (21). பனியன் கம்பெனி தொழிலாளி. ராமசாமியும், திவாகரனும் உறவினர்கள்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் பெருந்துறை அருகே உள்ள பெரியவீரசங்கிலியில் இருந்து கிரே நகர் நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ராமசாமி ஓட்டினார். பின்னால் திவாகரன் உட்கார்ந்திருந்தார். மோட்டார்சைக்கிள் விஜயமங்கலத்தை அடுத்த கோடாபுலியூர் அருகே சென்றபோது எதிரே வந்த லாரியும், மாட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை