மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது

ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டி பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

தேவதானப்பட்டி:

மோட்டார் சைக்கிள் திருட்டு

தேவதானப்பட்டி மேட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தடி வந்தனர்.

இதேபோல் ஆண்டிப்பட்டி, தென்கரை ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடு போயின. இதையடுத்து தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் நேற்று முன்தினம் கெங்குவார்பட்டி கம்பெனி பிரிவு அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில் அவர், தேவதானப்பட்டி மேட்டு வளைவு பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 22) என்றும், அவர் தேவதானப்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடிய வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவருடன் சேர்ந்து நண்பர்களான வெள்ளையன் (22), கிருஷ்ணகுமார் (25) ஆகியோரும் மோட்டார் சைக்கிள்களை திருடி, தஞ்சையை சேர்ந்த விக்னேஷ்வரனிடம்(29) கொடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து போலீசார் தஞ்சை சென்று விக்னேஷ்வரனிடம் இருந்த 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யா, விக்னேஷ்வரனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வெள்ளையன், கிருஷ்ணகுமாரை போலீசார் வலைவீசி தடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து