மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல், வாலிபர் சாவு, லாரி டிரைவர் படுகாயம் - பாபநாசம் அருகே பரிதாபம்

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் பட்டதாரி வாலிபர் இறந்தார். அவரது நண்பரான லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார்.

பாபநாசம்,

பாபநாசம் அருகே உள்ள தென்கரை ஆலத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கதிரவன்(வயது22). லாரி டிரைவர். அதே கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(19). சம்பவத்தன்று கதிரவன், மணிகண்டனை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு உறவினர் திருமணத்துக்கு பிளக்ஸ் போர்டு வாங்க பாபநாசத்துக்கு சென்றார். அப்போது பாபநாசம்- சாலியமங்கலம் மெயின்ரோட்டில் மின் வாரிய அலுவலம் அருகே இவர்கள் சென்று கொண்டிருந்த போது நாகலூரை சேர்ந்த வினோத்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் கதிரவன் ஓட்டு வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

இதில் கதிரவனும், மணிகண்டனும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இது குறித்து கதிரவன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீசார் வினோத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு