மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் மயங்கி விழுந்து சாவு

கீரிப்பாறையில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் மயங்கி விழுந்து இறந்தார்.

அழகியபாண்டியபுரம்,

கீரிப்பாறையில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் மயங்கி விழுந்து இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கணவர் சாவு

தடிக்காரன்கோணத்தை அடுத்து உள்ள கீரிப்பாறை வெள்ளாம்பி மலையோர கிராமத்தை சேர்ந்தவர் செம்பொன் காணி (வயது 95). இவருக்கு வள்ளியம்மாள் (93) என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

செம்பொன் காணி, வள்ளியம்மாள் மீது அன்பாக இருந்து வந்தார். இந்த நிலையில் செம்பொன் காணிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அது குணமடையாமல் கடந்த சில மாதங்களாக செம்பொன் காணி இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் செம்பொன் காணி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

துக்கத்தில் இறந்த மனைவி

உறவினர்கள் விரைந்து வந்து செம்பொன் காணி உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தனர். கணவர் இறந்ததில் இருந்து வள்ளியம்மாள் அழுதபடி இருந்தார். இந்தநிலையில் துக்கம் தாங்காமல் நேற்று காலையில் வள்ளியம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவரும் இறந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று மதியம் அவர்கள் இருவர் உடல்களையும் தனித்தனியாக அடக்கம் செய்தனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் கீரிப்பாறையில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு