நத்தம்,
நத்தம் தொகுதியில் செய்த வளர்ச்சி பணிகளால் எனது வெற்றி உறுதி என நத்தம் விசுவநாதன் பேட்டி.
தொண்டர்கள் உற்சாகம்
நத்தம் சட்டமன்ற தொகுதி யின் அ.தி.மு.க. வேட்பாளராக 5 வது முறையாக போட் டியிடும் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் நேற்று காலை 11 மணியளவில் நத்தம் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக காலை 10 மணி முதல் நத்தம் நகர் முழுவதும் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க. நிர்வாகிகள்,தொண்டர்கள் சாரை, சாரையாக குவிந்து இரட்டை இலைக்கு வெற்றி என கோஷமிட்டனர். இதனையடுத்து அங்கு வந்த நத்தம்விசுவநாதன் நிர்வாகிகள், தொண்டர்களின் உற்சாக வாழ்த்து கோஷத்தை ஏற்று கொண்டு தாலுகா அலுவலகத்தில் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பேட்டி
பின்னர் நிருபர்களிடம் கூறும்போது:-
நத்தம் சட்டமன்ற தொகுதியில் 5&வது முறையாக போட்டி யிடுகிறேன்.இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த போது செய்த பல கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளால் எனது வெற்றி உறுதி.பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
வளர்ச்சி பணிகள்
நத்தம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம், நத்தம் ,சாணார்பட்டி, செந்துறையில் பத்திரபதிவு அலுவலக கட்டிடங்கள்,புதிய பாலங்கள், அம்மா திருமண மண்டபங்கள், நத்தம் பஸ் நிலைய விரிவாக்கம்,வட்டார போக்குவரத்து அலுவலகம் பள்ளிகள் தரம் உயர்த்துதல், புதிய வகுப்பறை கட்டிடங்கள், துணைமின் நிலையங்கள் தரம் உயர்த்துதல், புதிய தார் சாலைகள், தடுப்பணைகள், குடிநீர், விவசாயத்திற்கு தடையற்ற மின்சாரம் என எண்ணற்ற பணிகள் நடைபெற்றுள்ளது.
மலை கிராமங்களில் சாலை.
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பொறுப்பேற்கும் அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று இப்பகுதியிலுள்ள லிங்கவாடி மலையூர், குட்டு பட்டி மலையூர் கிராமங்களுக்கு சாலைகள் அமைக்கப்படும், மேலும் நத்தத்தில் ஆயத்த ஆடைகள் அமைக்க ஜவுளி பூங்கா, மின்மயானம் உள்ளிட்ட நத்தம் தொகுதி யின் வளர்ச்சிக்கேற்ப தேவை யான, புதிய பணிகளை நிறைவேற்றுவேன்.
நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்தபடம். உடன் அ.தி.மு.க.வினர்.
தனிநபர் விமர்சனம்.
எதிர்கட்சியினர் தனிநபர் விமர்சனத்தை நம்பி போட்டியிடுகின்றனர் நான் தனிநபர் விமர்சனத்தில் என்றுமே ஈடுபடமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
நத்தத்தில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு
மேலும் அவர் மீனாட்சிபுரத்தில் கட்சி தேர்தல் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்திற்கு மாலைகள் அணிவித்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். அப்போது உடன் நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், மணிகண்டன், சின்னு, சுப்பிர மணி, பேரூர் செயலாளர் சிவலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், முன்னாள் எம்.பி உதயகுமார், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், நகர் பேரவை செயலாளர் ஷேக் தாவூது, மாவட்ட கவுன்சிலர் கள் சின்னாக் கவுண்டர், பார்வதி, ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் வேலம் பட்டி கண்ணன், ஆண்டிச் சாமி, ஜெயப்பிரகாஷ், சுப்பிர மணி சவரிமுத்து, நகர அவைத் தலைவர் சேக்ஒலி, நகர் பொருளாளர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி மோகன்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் ஆசை,நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராமமூர்த்தி, தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் குப்பான், மின்சார வாரிய முன்னாள் அரசு வக்கில் ராமநாதன், முன்னாள் கவுன்சிலர் காசிநாதன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.