மாவட்ட செய்திகள்

கரசங்கால் அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரசங்கால் அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்-வாலாஜாபாத் 6 வழி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தாம்பரம், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் செல்கிறது. இந்த 6 வழிச்சாலையின் பணிகள் முடிவடைந்து வரும் நிலையில் படப்பை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் பணி முழுமையாக முடிவடையவில்லை.

இதனால் படப்பை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக இந்த பகுதி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து