மாவட்ட செய்திகள்

பழனி அருகே துணிகரம், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பழனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது. தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நெய்க்காரப்பட்டி,

பழனி அருகே சின்னக்கலையம்புத்தூர் ஆர்.ஜி.நகரை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 50). அவருடைய மனைவி சாவித்திரி. இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகனும், கிருத்திகா என்ற மகளும் உள்ளனர். இதில் விக்னேஷ் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். கிருத்திகா அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஸ்தூரி-சாவித்திரி தம்பதி வீட்டை பூட்டிவிட்டு மகளை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று கஸ்தூரி வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் பழனி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அதில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கஸ்தூரி வீட்டு பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இந்நிலையில் கஸ்தூரி-சாவித்திரி தம்பதி வந்து பார்த்த பின்னர்தான் எவ்வளவு நகை-பணம் திருடு போனது என்பது தெரியவரும்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். எனவே இந்த 2 சம்பவங்களில் ஒரே நபர்கள் தங்களது கைவரிசையை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு