மாவட்ட செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

பள்ளிப்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கொத்தகுப்பம் ஊராட்சி பாதகுப்பம் கிராமத்தில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவர்களுக்கு சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலிகுடங்களுடன் அத்திமாஞ்சேரிப்பேட்டை- பொதட்டூர்பேட்டை சாலை யில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்