மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் அருகே வெறிநாய் கடித்து 10 பேர் காயம்

சாத்தான்குளம் அருகே வெறிநாய் கடித்து 10 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளம் பஞ்சாயத்து நொச்சிக்குளம் கிராமத்தில் நேற்று முன்தினம் காலையில் வெறிநாய் சுற்றி திரிந்தது.

அது, தெருக்களில் நடந்து சென்ற பொதுமக்களை விரட்டிச் சென்று கடித்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சிலுவை மிக்கேல் மனைவி பன்னீர் செல்வம் (வயது 45) உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்கள் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

பலத்த காயம் அடைந்த பன்னீர்செல்வம் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், வெறிநாயை அடித்து கொன்றனர்.

இதேபோன்று செட்டிக்குளத்திலும் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இவைகள் அந்த வழியாக மெயின் ரோட்டில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றன.

எனவே சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து சென்று அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து