திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கொசவன்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 45). இவர் திருவள்ளூர் டோல்கேட்டில் உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதியன்று வேலையை முடித்துக்கொண்டு ரவி தனது சைக்கிளில் கொசவன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவர் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
சாவு
இதில் பலத்த காயம் அடைந்த ரவியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.