மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் அருகே தொழிலாளியை கடத்தி கொலை செய்ய முயன்ற 3 பேர் கைது

உத்திரமேரூர் அருகே தொழிலாளியை கடத்தி கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கும் பருத்திக்கொள்ளை பகுதியை சேர்ந்தவர் பாபு (28) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று டில்லிபாபு உத்திரமேரூர் செங்கல்பட்டு சாலையில் நடந்து சென்ற போது, அந்த வழியே காரில் வந்த பாபு மற்றும் அவரது நண்பர்கள் டில்லிபாபுவை கடத்தி சென்றுள்ளனர். பின்னர், சிறுங்கோழி பகுதியில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, டில்லிபாபு அவர்களிடமிருந்து தப்பி நெல்வாய் பகுதியில் வைத்து சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். சாலவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் தலைமையிலான போலீசார் நெல்வாய் பகுதியில் விரைந்து வந்து டில்லிபாபுவை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து, அங்கு மறைந்திருந்த பாபுவின் கூட்டாளிகளான மகேந்திராசிட்டி பகுதியை சேர்ந்த அமல்ராஜ் (34), விஜயகுமார் (33), மற்றும் ராதா (30) ஆகிய 3 பேரையும் கைது செய்து, உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்