மாவட்ட செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜர் மீண்டும் மதுரை சிறையில் அடைப்பு

பேராசிரியை நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிர்மலாதேவி. தனியார் கல்லூரியில் பராசிரியையாக பணியாற்றி வந்த இவர், சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 18-ந்தேதி வழக்கு விசாரணைக்கு நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இதையடுத்து நிர்மலா தேவிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவியை கைது செய்து நீதிபதி பரிமளா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் மதுரை சிறையில் நிர்மலாதேவியை அடைத்தனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பாதுகாப்போடு அழைத்து வந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 2-ந்தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து நிர்மலா தேவியை போலீசார் மீண்டும் அழைத்துச் சென்று மதுரை சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை