மாவட்ட செய்திகள்

சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி கடிதம் கேட்டு பெருந்துறையில் திரண்ட வடமாநில தொழிலாளர்கள்

சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி கடிதம் கேட்டு பெருந்துறை தாலுகா அலுவலகம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் திரண்டனர்.

தினத்தந்தி

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சிப்காட் பகுதிகளில் மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா ஆகிய வடமாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இவர்கள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக வேலை இல்லாமல் அங்கேயே தங்கி இருந்து வருகின்றனர்.

தற்போது மத்திய அரசு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் வேலை பார்ப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளது. அதைத்தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி கடிதம் கேட்டு வடமாநில தொழிலாளர்கள் 1,114 பேர் நேற்று பெருந்துறை தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர்.

அப்போது அங்கிருந்த தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் அவர்களிடம் கூறும்போது, சொந்த ஊருக்கு செல்ல அனுமதி பெற ஆன்-லைன் மூலமாக மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் சர்வர் சரிவர வேலை செய்யாததால் விண்ணப்பிக்க சிறிது நேரம் ஆகும். அதுவரை பொறுமை காக்க வேண்டும். என்றார்.

இதைத்தொடர்ந்து, தாலுகா அலுவலகம் முன்பு திரண்டு நின்ற வட மாநில தொழிலாளர்கள், வரிசையாக சமூக இடைவெளி விட்டு, நீண்ட நேரம் கால்கடுக்க நின்று அனுமதி கடிதம் பெற்றுச்சென்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து