மாவட்ட செய்திகள்

சாகுபடி நிலங்கள் பாதிக்காத வகையில் சாலையோரமாக எண்ணெய் குழாய் பதிக்க வேண்டும்

சாகுபடி நிலங்கள் பாதிக்காத வகையில் சாலையோரமாக எண்ணெய் குழாய்கள் பதிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பல்லடம்,

பல்லடத்தில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத்தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன், செயலாளர் குமார், மாநில செயலாளர் முத்து விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஈசன், செந்தில்குமார், தமிழ் ராஜேந்திரன், ஏர்முனை சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

எண்ணெய் குழாய்

உயர்மின் கோபுரங்களுக்காக விவசாயிகளிடம் இருந்து எடுக்கப்படும் நிலங்களுக்கு வெளிச்சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். கிணறு, ஆழ்துளை கிணறு, வீடு,கோழிப்பண்ணை போன்ற கட்டுமானங்களுக்கு சந்தை மதிப்பில் 4 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை மரத்துக்கான இழப்பீடு கோவை மாவட்டத்தில் வழங்குவதைப் போல் திருப்பூர் மாவட்டத்திலும் வழங்க வேண்டும். சட்டப்படியான இழப்பீடு வழங்காமல் இருப்பதை கண்டித்தும், சாகுபடி நிலங்கள் பாதிக்காத வகையில் ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 26-ந் தேதி மாலை 6 மணிக்கு பல்லடம் கடை வீதியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் எம்.பி.க்கள் நடராஜன் (கோவை), சுப்பராயன் (திருப்பூர்), வேலுசாமி (திண்டுக்கல்), கணேசமூர்த்தி(ஈரோடு), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), ஜோதிமணி (கரூர்) ஆகியோரை பங்கேற்க அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆலோசனைக்கூட்ட முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து