மாவட்ட செய்திகள்

நந்திவரத்தில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 7 பேர் கைது

நந்திவரத்தில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பரத் (வயது 30). இவர் கடந்த 1 மாதத்திற்கு முன்பு பூமிநாதன் என்பவரை வெட்டிய வழக்கில் சிறைக்கு சென்று சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் பரத்தை வெட்டுவதற்காக 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 22-ந்தேதி தேதி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது பரத் வீட்டில் இல்லாத காரணத்தினால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து பரத் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிய 7 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் நந்திவரம் பகுதியை சேர்ந்த கோகுல் என்கிற கோகுலகிருஷ்ணன் (வயது 25), அப்பு என்கிற ஆகாஷ் (28), நிஜாமுதீன் (26), தனசேகரன் (26), கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரித்தீஷ் (23), கூடுவாஞ்சேரி சேர்ந்த கார்த்திக் என்கிற பூனை கார்த்திக் (24), அப்துல் (25), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை