மாவட்ட செய்திகள்

பொது நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ஆயிரம் கோடி ரூபாய் விடுவிப்பு- அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி நேரம் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டசபையில் பேசும் போது கூறியதாவது:-

தமிழகத்தில் பொது நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1,000 கோடி நேற்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 5,48,000 நகைக் கடன்கள் தள்ளுபடி செய்து ரசீது தரப்பட்டுள்ளன.

மார்ச் 31ஆம் தேதிக்குள் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறியிருந்தேன். ஆனால், 3 நாள்கள் முன்னதாக மார்ச் 28ஆம் தேதியே அனைவருக்கும் தள்ளுபடி ரசீதுகள் தரப்படும் என நம்புகிறேன் என கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்