மாவட்ட செய்திகள்

எருமப்பட்டி அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

எருமப்பட்டி அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் திவாகர் (வயது 20). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் ரமேஷ் தனது குடும்பத்துடன் வீரப்பூர் செல்ல முடிவு செய்தார். அதற்காக அவர் திவாகரை அழைத்தார். ஆனால் திவாகர் அவர்களுடன் செல்லவில்லை. இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த திவாகர் மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் திவாகர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பெயிண்டர் தற்கொலைக்கான காரணம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்