மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடை அகற்றப்படாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு முருகம்பாளையம் பகுதி பொதுமக்கள் தீர்மானம்

ரபாண்டி முருகம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அகற்றப்படாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்படடுள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வீரபாண்டி

வீரபாண்டி முருகம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அகற்றப்படாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்படடுள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் பகுதியில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டங்கள், சாலைமறியல், உண்ணாவிரதப்போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் கடந்த மாதம் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக உத்தரவாதம் அளித்தது. ஆனால் ஆளுங்கட்சியின் உதவியுடன் தொடர்ந்து தற்போது வரை டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதாக உள்ளூர் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து வந்தனர். இந்நிலையில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. முருகம்பாளையம் பகுதியில் தற்போது வரை டாஸ்மாக் கடை அகற்றாமல் செயல்பட்டு வருவதைக்கண்டித்தும் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை அனுமதிக்கப்போவதில்லை என்றும் நேற்று நடந்த ஊர் பொதுமக்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தலை புறக்கணிக்க முடிவு

தொடர்ந்து டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தால் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து