மாவட்ட செய்திகள்

குளித்தலை சுடுகாட்டில் உள்ள சமாதியில் வாலிபர்கள் மனு

குளித்தலை சுடுகாட்டில் உள்ள சமாதியில் வாலிபர்கள் மனு அளித்தனர்.

தினத்தந்தி

குளித்தலை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முத்துச்செல்வன் மற்றும் குளித்தலை பகுதி பொதுமக்கள் சார்பில் இளைஞர்கள் பலர் குளித்தலை சுடுகாட்டில் உள்ள சமாதியில் நேற்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குளித்தலை நகரத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திவந்த அண்ணாநகர் புறவழிச்சாலை மூடப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலை திறப்பது தொடர்பாக கடந்த ஆண்டு நடந்த ஆலோசனை கூட்டத்தில் 30 நாட்களில் சாலை திறக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இச்சாலை திறக்கப்படவில்லை. பின்னர் குளித்தலை பகுதி இளைஞர்கள் போக்குவரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுத்து பேசிய போது ஒரு மாதத்தில் மூடப்பட்ட சாலை திறக்கப்படும் என அவர் உறுதியளித்திருந்தார். கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் மூடப்பட்ட இந்த சாலையை நேரில் வந்து ஆய்வு செய்த பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த மூடப்பட்ட சாலையால் மக்கள் படும் இன்னல்களை எடுத்துக்கூறி பாதையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து