மாவட்ட செய்திகள்

மோப்ப நாய் மூலம் போலீசார் கஞ்சா தேடுதல் வேட்டை

தேனி மாவட்டம் கம்பத்தில் மோப்ப நாய் மூலம் போலீசார் பதுக்கி வைத்திருக்கும் கஞ்சாவை கண்டுபிடிக்க சோதனை நடத்தினர்.

தினத்தந்தி

தேனி :

தேனி மாவட்டம் கம்பம், கேரள மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் கம்பம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர். இதை தடுக்க உள்ளூர் போலீசார், போதைப் பொருள் தடுப்பு போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேனிமாவட்டத்தில் குறிப்பாக கம்பத்தில் கஞ்சா இல்லாத நகராக மாற்ற தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பதுக்கி வைத்திருக்கும் கஞ்சாவை எளிதில் கண்டறிய மேப்ப நாய் வெற்றி மூலம் நேற்று முன்தினம் இரவு உத்தமபுரம் பகுதியில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் கஞ்சா எதுவும் கைப்பற்றப்படவில்லை. கடந்த ஆண்டு இதேபோல் மணிகட்டி ஆலமரம் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அங்குள்ள தனியார் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டிருந்ததை மோப்பநாய் வெற்றி கண்டுபிடித்தது. அதனை போலீசார் தீ வைத்து அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து