மாவட்ட செய்திகள்

தென்காசி மாவட்டத்தில்- 886 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தென்காசி மாவட்டத்தில் 886 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சங்கரன்கோவிலில் அமைச்சர் ராஜலட்சுமி, முகாமை தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் 886 மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோவில்கள் ஆகிய மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் ரயில் நிலையம், தியேட்டர், தங்கும் விடுதிகள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் முகாம் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

கிராமப்புற பகுதிகளில் 86 ஆயிரத்து 638 குழந்தைகளுக்கும், நகர்ப்புற பகுதிகளில் 28 ஆயிரத்து 894 குழந்தைகளுக்கும், மொத்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 532 குழந்தைகளுக்கும் நேற்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் 30 நடமாடும் முகாம்கள் நடத்தப்பட்டன.

அமைச்சர் ராஜலட்சுமி

சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் உள்ள தாய் சேய் நல விடுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. நகரசபை ஆணையாளர் சாந்தி, சுகாதாரதுறை இணை இயக்குனர் அருணா, வட்டார மருத்துவ அலுவலர் ராஜரத்தினம், நகர் நல மைய மருத்துவர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் நகரசபை பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையா, பாஸ்கர், மாதவராஜ்குமார், கருப்பசாமி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி

தென்காசி மலையான் தெருவில் உள்ள தாய்- சேய் நல விடுதியில் மாவட்ட கலெக்டர் சமீரன் முகாமை தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் சுகாதார பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், ரோட்டரி சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சேவை செய்தனர். விடுபட்ட குழந்தைகளுக்கு நாளையும், நாளை மறுதினமும், வீடுகளுக்கு நேரில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை