மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலியானார்.

தினத்தந்தி

சென்னை தண்டையார்பேட்டை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் மைக்கேல். இவருடைய மகன் அபினாஷ் (வயது 21). இவர், திருவொற்றியூர் மாட்டுமந்தை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், தன்னுடைய நண்பரான கொடுங்கையூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரூபேஷ் (19) என்பவருடன் நேற்று முன்தினம் மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் தண்டையார்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் கார்கில் நகரில் உள்ள மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அபினாஷ் ஓட்டினார். திருவொற்றியூர் பேசின் சாலை கான்கார்ட் கன்டெய்னர் யார்டு அருகே சென்றபோது அவர்களுக்கு பின்னால் இருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த அபினாஷ், அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார். படுகாயம் அடைந்த ரூபேஷ், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து