மாவட்ட செய்திகள்

தவறி விழுந்து காயம் பிரபல நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி

தவறி விழுந்து காயம் பிரபல நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த கார்த்திக் தற்போது மற்ற நடிகர்கள் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். வில்லனாகவும் நடிக்கிறார். சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் கார்த்திக், வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால் எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து