மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 9 பேருக்கு கொரோனா அரியலூரில் 10 பேர் பாதிப்பு

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 9 பேருக்கு கொரோனா, அரியலூரில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை தேர்தல் பிரிவில் பணிபுரிந்து வரும் ஆலம்பாடியை சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஊழியர் ஒருவருக்கும், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தை சேர்ந்த 28, 19 வயதுடைய 2 பெண்களுக்கும், நூத்தப்பூரை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பெண்ணிற்கும், 17, 29, 24 வயதுடைய ஆண்களுக்கும், குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாட்டை சேர்ந்த 3 வயது குழந்தை, 30 வயதுடைய பெண் என 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று மொத்தம் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 607 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு