மாவட்ட செய்திகள்

ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ.க்கள் கன்னியாகுமரி வருகை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர்

ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏக்கள் நேற்று கன்னியாகுமரி வந்தனர். அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ.க்கள் அனிதா படேல், கைலாஸ் திரிவேதி, நரேந்திர நாதர், ஓம்பிரகாஷ் கவுதாலா ஆகிய 4 பேரும் நேற்று குடும்பத்தினருடன் கன்னியாகுமரி வந்தனர்.

அங்கு அவர்கள் விவேகானந்த கேந்திராவில் தங்கி ஓய்வெடுத்தனர். பின்னர் படகு மூலம் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றனர். அங்கு ஸ்ரீபாத மண்டபம், சபா மண்டபம், தியான மண்டபத்தை பார்த்து ரசித்தனர்.

சாமி தரிசனம்

முன்னதாக எம்.எல்.ஏ.க்களை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் மற்றும் பலர் வரவேற்றனர். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அவர்களை கோவில் மேலாளர் ஆறுமுக நயினார் வரவேற்று கோவிலின் பெருமைகள் குறித்து பேசினார். விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவையொட்டி ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ.க்கள் கன்னியாகுமரி வந்ததாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை