மாவட்ட செய்திகள்

தமிழக பிரச்சினைகள் பற்றி தெரியாதது போல் ரஜினிகாந்த் நடிக்கிறாரா? - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி

தமிழக பிரச்சினைகள் பற்றி தெரியாதது போல் ரஜினிகாந்த் நடிக்கிறாரா? என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கடலூர்,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் யார்? என்று ரஜினிகாந்த் கேள்வி எழுப்புகிறார். தமிழ்நாட்டில் நடக்கிற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து தெரியாதவராக இருக்கிறாரா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறாரா? திரையில் சினிமா இயக்குனர்கள் கொடுக்கிற வசனங்களை பேசி நடிக்கின்ற வெறும் நடிகனாக மட்டும் தான் ரஜினிகாந்த் வாழ்ந்து வருகிறாரா? என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இதுபோன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி தெரியாமல், தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்?.

7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ரஜினிகாந்த் தனது நிலையை தெளிவு படுத்த வேண்டும்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு