சேந்தமங்கலம்,
சேந்தமங்கலம் ஒன்றியம் வாழவந்தி கோம்பை ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று நிவாரண பொருட்கள் வழங்க சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஏற்பாடு செய்தார்.
அதன்படி அந்த ஊராட்சியில் உள்ள பள்ளம்பாறை, தாதங்கோம்பை, ஊர்ப்புறம், வெண்டாங்கி, காரவள்ளி உள்பட ஊராட்சி பகுதி முழுவதும் சுமார் 1,000 ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 2 கிலோ அரிசி, முட்டை மற்றும் காய்கறிகளை வாழவந்தி கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் ராஜி முன்னிலையில், யுவராஜ் சந்திரசேகரன் வழங்கினார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர் பெருமாள், பிரமுகர் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.