மாவட்ட செய்திகள்

8 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை - அமைச்சர் கந்தசாமி உறுதி

புதிதாக 8,250 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி உறுதியளித்தார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி-பதில் நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

பாஸ்கர்: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை 60 வயதை கடந்தவர்களுக்கு ரூ.1,500-லிருந்து ரூ.2 ஆயிரமாகவும், 80 வயதை கடந்தவர்களுக்கு ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரம் வழங்கப்படாமல் உள்ளதை அரசு அறியுமா? 60 வயது மற்றும் 80 வயது கடந்தவர்களுக்கு உயர்த்த வேண்டிய உதவித்தொகையை இந்த ஆண்டாவது உயர்த்தி வழங்கப்படுமா?

அமைச்சர் கந்தசாமி: முதியோர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு அரசாங்க ஒப்புதலுடன் ஒவ்வொரு ஆண்டும் மே மாதமும் முதல் தேதியில் உதவித்தொகை 60 வயது பூர்த்தியானவர்களுக்கு தானாகவே ரூ.2 ஆயிரமாகவும், 80 வயது பூர்த்தியானவர்களுக்கு தானாகவே ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. மேலும் தகுதியான பயனாளிகள் விடுபட்டு இருப்பின் அவர்கள் பிறந்த பதிவு அல்லது வயது சான்றிதழுடன் அணுகினால் உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஸ்கர்: ஏற்கனவே நாங்கள் விண்ணப்பம் கொடுத்துள்ளோம். அதற்கு வழங்கவில்லை.

அமைச்சர் கந்தசாமி: எங்களிடம் 8,250 விண்ணப்பங்கள் உள்ளன.

பாஸ்கர்: 1 வருடங்களுக்கு முன்பு விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கே இன்னும் வரவில்லை.

அமைச்சர் கந்தசாமி: 8 ஆயிரத்து 250 பேருக்கு இந்த ஆண்டு புதியதாக உதவித்தொகை வழங்கப்படும்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி: 60 வயது முடிந்தவர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்போம்.

டி.பி.ஆர்.செல்வம் (என்.ஆர்.காங்): ஆதார் கார்டு, பிறந்த பதிவு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் உள்ள பிறந்த தேதிகளில் எதை எடுத்துக்கொள்வது என்பது தொடர்பாக ரங்கசாமி ஆட்சியில் பிரச்சினை ஏற்பட்டது. அதில் ஆதார் பதிவினையே எடுத்துக்கொள்ள எம்.எல்.ஏ.க்கள் ஒப்புதல் வழங்கினோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து