மாவட்ட செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரசாரம் விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெற்றது.

இந்த பிரசாரம் மற்றும் பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தொடங்கி வைத்தார். விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து நான்குமுனை சந்திப்பு வரை இந்த பேரணி சென்று திரும்பியது.

இப்பேரணியில் கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணி முடிந்ததும் நாட்டுப்புற கலைஞர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நாடகம் நடைபெற்றது. மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து,போக்குவரத்து போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வசந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து