பொன்னேரி அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி டில்லிபாபு தலைமையில் வாகன சோதனை செய்து வந்த நிலையில், நேற்று பெரியபாளையத்தில் இருந்து சென்னை நோக்கி வேன் ஒன்று வேகமாக வந்தது. அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.28 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்கான ஆவணங்கள் இல்லாத நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் பொன்னேரி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்து.
அதே போல் மீஞ்சூரை அடுத்த அருமந்தை கிராமம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். சோதனையின் போது அந்த வேனில் ரூ.7 லட்சத்து 92 ஆயிரத்துக்கான 16 பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து பொன்னேரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.