மாவட்ட செய்திகள்

நிலத்தகராறில் சம்பா நெற்பயிர்கள் வி‌‌ஷ பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அழிப்பு 3 பேருக்கு வலைவீச்சு

கீழ்வேளூர் அருகே நிலத்தகராறில் சம்பா நெற்பயிர்கள் வி‌‌ஷ பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ள வெண்மணி நுகத்தூரை சேர்ந்தவர் பாண்டியன். விவசாயி. இவர் அதே பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்துள்ளார். இந்தநிலையில் பாண்டியனின் சித்தப்பா வேணுகோபாலுக்கும், பாண்டியனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட் களுக்கு முன்பு இரவு மர்ம நபர்கள் பாண்டியனின் வயலில் விஷ பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தனர்.

3 பேருக்கு வலைவீச்சு

இதன் காரணமாக வயலில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் கருகி நாசமாகின. இதுகுறித்து பாண்டியன் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேணுகோபால் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து