மாவட்ட செய்திகள்

கோத்தகிரி கடைவீதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

கோத்தகிரி கடைவீதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தினத்தந்தி

கோத்தகிரி,

கோத்தகிரி கடைவீதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஈளாடா தடுப்பணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் கோடைகாலத்தில் தடுப்பணை வறண்டு விடுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.இதை தீர்க்கும் வகையில் ரூ.10 கோடியே 60 லட்சம் செலவில் அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் கடைவீதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆனால் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அங்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கடைவீதி பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டுக்கு தனி குடிநீர் இணைப்பு பெற்று உள்ளனர். மேலும் அதற்கான வரியை தவறாமல் நகராட்சிக்கு செலுத்தி வருகிறோம். ஆனால் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது போதுமானதாக இல்லை.

இதனால் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வாரத்துக்கு 5 நாட்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்