மாவட்ட செய்திகள்

பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்

பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

தினத்தந்தி

பாதாள சாக்கடை திட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.54 கோடியே 78 லட்சத்தில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. கொரோனா தொற்றால் கடந்த 2 வருடங்களாக பணிகள் தேக்கம் அடைந்தது. தற்போது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதுவரை ரூ.20 கோடி 36 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிந்துள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொன்னேரி நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

ஆண்டு இறுதிக்குள்

இந்த ஆய்வின் போது குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் அமலதீபன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பணிகளின் நிலையை விளக்கமாக எடுத்துரைத்தனர்.

பின்னர் கலெக்டர் கூறுகையில்:- பொன்னேரி நகராட்சியில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, நகராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், நீர்வளத்துறை உதவி பொறியாளர் பாலு உட்பட பலர் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை