மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ராசிபுரம் அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டி நிங்கணாங்காடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 27). கூலித்தொழிலாளி.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி மூலப்பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய கல்லூரி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவியின் பெற்றோர் நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூபதியை கைது செய்தனர். பின்னர் அவர் மீது நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட பூபதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பூபதியை கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்