மாவட்ட செய்திகள்

மசூதிக்குள் புகுந்து தொழுகையில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை

மசூதிக்குள் புகுந்து தொழுகையில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொக்கொட்டு பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. தற்போது ரம்ஜான் பண்டிகையையொட்டி அங்கு தினமும் அதிகாலையில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அந்த மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணுக்கு, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து உல்லால் போலீசில் ஒப்படைத்தனர். அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா நிட்டே பகுதியைச் சேர்ந்த சுஜித் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை