மாவட்ட செய்திகள்

ஆரணியில் போலீஸ் நிலையம் முற்றுகை

ஆரணியில் சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

தினத்தந்தி

ஆரணி,.

ஆரணி சைதாப்பேட்டை நாடகசாலை பேட்டை தெருவை சேர்ந்த ஒருவர் கடந்த சில வருடங்களாக சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலர் சீட்டுகட்டி முடித்த நிலையிலும் அவர்கள் கட்டிய பணத்தை அவர்களுக்கு திருப்பி கொடுகத்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

இதனால் பணம் கட்டி ஏமாந்த பலர் தொடர்ந்து அவரது வீட்டுக்குச் சென்று பணம் கேட்டு வந்துள்ளனார். பணம் கிடைக்காததால் அவர்கள் இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்திடம் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் சீட்டு நடத்தியவரிடம் விசாரணை நடத்தி அவரிடம் இருந்து ஒரு சிறு தொகையை பெற்று ஒருசிலருக்கு கொடுத்துள்ளனர். மற்றவர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) பணம் தருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பணம் கட்டி ஏமாந்து புகார் அளிக்காத மேலும் பலர் நேற்று ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். அவர்களை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி, இது சம்பந்தமாக ஏற்கனவே போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளதாலும், பணம் கோடிக்கணக்கில் வருவதாலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்தான் புகார் அளிக்க வேண்டும் எனக்கூறி அனுப்பி வைத்தார்.

சுமார் 2 மணி நேரம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூடியிருந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்