மாவட்ட செய்திகள்

திருக்கனூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல்

திருக்கனூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.உடனேஅதிகாரிகள் ஆய்வு செய்து குடிநீர் இணைப்பில்விவசாயத்துக்கு பயன்படுத்திய குழாய்களைஅதிரடியாகதுண்டித்தனர்.

தினத்தந்தி

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் மாரியம்மன் கோவில் வீதி உள்பட சில பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.இதுதொடர்பாக கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார்தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் செட்டிப்பட்டு கிராம மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை