தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு ஐ.சி.எப். கூடுதல் பொறுப்பு
சென்னை ஐ.சி.எப். பொது மேலாளராக ராகுல் ஜெயில் பதவி வகித்து வந்தார். இவர், தற்போது ரெயில்வே வாரியத்தின் பாதுகாப்புத்துறையின் தலைமை இயக்குனராக பதவி உயர்வு பெற்று, பதவி ஏற்றுள்ளார்.
தினத்தந்தி
இதையடுத்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், காலியாக உள்ள ஐ.சி.எப். பொது மேலாளர் பதவி கூடுதல் பொறுப்பை நேற்று ஏற்றுக்கொண்டார். இவர், இந்திய ரெயில்வே மின்பொறியாளர் சேவையின் 1982-ம் ஆண்டு குழுவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.