மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்குதல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பம் பெறுதல் மற்றும் அலிம்கோ மூலம் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

தினத்தந்தி

பெரம்பலூர்,

பெரம்பலூர் தாலுகாவிற்கு இன்று (வியாழக்கிழமை) பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள ஸ்ரீ கவுதம புத்தர் காது கேளாதோர் சிறப்பு பள்ளியிலும், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், குன்னம் தாலுகாவிற்கு 16-ந்தேதி வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், ஆலத்தூர் தாலுகாவிற்கு 17-ந்தேதி பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

முகாமில் கலந்துகொள்ள வரும் மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்கு உரிய தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்) பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எடுத்து வரவேண்டும்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து