மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு பணியாளர் சம்மேளன மண்டல தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மண்டல பொதுச்செயலாளர் தண்டபாணி, மாநில இணை செயலாளர் கோமகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல பொதுச்செயலாளர் லோகநாதன், ஓய்வு பெற்ற அமைப்பின் மண்டல செயலாளர் மணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஓய்வூதியத்தில் ஒப்பந்த உயர்வுகளை அமல்படுத்த வேண்டும், 2016 செப்டம்பர் முதல் 2.57 காரணி உயர்வு பென்சனுக்கும் வழங்க வேண்டும், பஞ்சப்படி நிலுவைகளை உடனே தீர்வு செய்ய வேண்டும், அரசு ஊழியர்போல் கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு, இறப்பு நிவாரணம் வழங்க வேண்டும், கல்வித்தகுதிக்கு ஏற்ப வாரிசு நியமனத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பணியாளர் சம்மேளன மண்டல செயலாளர் ராஜாமணி, ஓய்வு பெற்ற அமைப்பின் மண்டல தலைவர் சீனுவாசன் உள்பட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மண்டலங்களை சேர்ந்த பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் மண்டல பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து