மாவட்ட செய்திகள்

பெரியபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 21 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை

பெரியபாளையத்தில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருள்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

தொழிலதிபர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், ஆர்.ஜி.என் நகரில் வசித்து வருபவர் பிரதீஷ் (வயது 36). தொழிலதிபர். இவருக்கு சுவேதா என்ற மனைவியும், கிருஷிக் நரசிம்மா (8), அத்விக்நரசிம்மா (4) என்ற மகன்கள் உள்ளனர்.

இவர் தனது மகன்களின் படிப்பிற்காக சென்னை அண்ணா நகரில் வீடு வாங்கி வசித்து வருகிறார். இருப்பினும் பெரியபாளையத்தில் விவசாய நிலம் உள்ளதால், அடிக்கடி இங்கு வந்து தங்கி தொழில் மற்றும் விவசாயத்தை கவனித்து வருகிறார்.

கொள்ளை

இந்நிலையில், பிரதீஷ் தனது நண்பருடன் 3 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஐதராபாத் சென்றிருந்தார். எனவே அவரது கார் டிரைவர் பிரதீஷ் (23) என்பவர் வீட்டை கவனித்து வந்தார். நேற்று காலை டிரைவர் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் இருந்த 3 நாய்களும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 21 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தொழிலதிபருக்கு தகவல் அளித்தார். பின்னர், இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில், போலீசார் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்களாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து