மாவட்ட செய்திகள்

வீதி வீதியாக கிருமி நாசினி தெளிப்பு

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தினந்தோறும் வீதி வீதியாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தினத்தந்தி

கோவை

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தினந்தோறும் வீதி வீதியாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கோவையில் மட்டும் எதிர்பார்த்த அளவு இன்னும் குறையவில்லை.

எனவே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், ஆபத்து அதிகம் இல்லாத ஏ வகை அறிகுறிகளுடன் இருந்தவர் களில் 60 சதவீதம் பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தனர்.

தற்போது அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

கிருமி நாசினி தெளிப்பு

மாவட்டம் முழுவதும் தற்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமை சிகிச்சையில் உள்ளனர்.

இதனால் கடந்த ஒரு வாரமாக தினமும் வீடு, வீடாக சுகாதாரப் பணியாளர்கள் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

அப்போது தனிமைப்படுத்த பட்டவர்களின் வீடுகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பட்டு பிளிச்சீங் பவுடரும் தூவப்படுகிறது.

கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பழனியப்பா தெரு, தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட முத்தையா உடையார் வீதி, ராஜராஜேஸ்வரி நகர், நாராயணசாமி நகர், ஜெயலட்சுமி நகர், முத்து மாரியம்மன் கோவில் வீதி மற்றும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து