மாவட்ட செய்திகள்

நெல்லை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம்

நெல்லை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

தினத்தந்தி

நெல்லை,

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கொள்கை பரப்பு செயலாளர் மாசிலாமணி மற்றும் நிர்வாகிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். நெல்லை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நெல்லை மாநகரின் முக்கிய குளங்களில் ஒன்றான நெல்லை சந்திப்பு உடையார்பட்டி குளத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைத்து அதில் தண்ணீர் நிரப்பி படகு குழாம் அமைத்து படகுவிட வேண்டும். நெல்லை கால்வாயில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் வருகிறது. அப்படி தண்ணீர் வருகின்ற இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நெல்லை கால்வாயில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி சீராக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை