பெங்களூரு,
விதானசவுதாவுக்குள் செல்ல உரிய அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல, பத்திரிகையாளர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விதானசவுதா வழியாக தனியார் வாகனங்கள் சென்று வருவதற்கும் நேற்று திடீரென்று போலீசார் தடை விதித்தார்கள்.
வாகனங்களுக்கான பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே விதானசவுதா வழியாக சென்றுவர அனுமதிக்கப்பட்டார்கள். அதுபோல, வக்கீல்களும் சென்று வர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பத்திரிகையாளர்கள், பிற தனியார் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.