மாவட்ட செய்திகள்

பத்திர எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம் ஆன்லைன் பத்திர பதிவு முறையை ரத்து செய்ய கோரிக்கை

ஆன்லைன் பத்திர பதிவு முறையை ரத்து செய்யக்கோரி பாபநாசத்தில் பத்திர எழுத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பாபநாசம்,

ஆன்லைன் பத்திர பதிவு முறையால் தாமதம் ஏற்படுவதால், ஆன்லைன் பத்திர பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் பத்திர பதிவு செய்ய டி.சி.எஸ். என்ற நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திர பதிவு எழுத்தர்கள் கடந்த 19-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி பாபநாசம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பத்திர எழுத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தஞ்சை மாவட்ட துணை தலைவர் பாரதிதாசன் தலைமை தாங்கினார்.

கோஷங்கள்

மாவட்ட செயலாளர் வீரமணி, மாநில துணை அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் கிரிதரராவ், ஆவண எழுத்தர்கள் சிவராஜ், பசுபதி, வக்கீல் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து