மாவட்ட செய்திகள்

கார்த்திகை கடை ஞாயிறு திருவிழாவையொட்டி வாஞ்சிநாதர் கோவிலில் தீர்த்தவாரி

ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.

தினத்தந்தி

நன்னிலம்,

நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியத்தில் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு திருவிழா கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் சாமி வீதி உலா நடந்தது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடந்தது. விழாவில் நேற்று கடை ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது.

தீர்த்தவாரி

இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள குப்தகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பின்னர் திரளான பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர். நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், இன்ஸ்பெக்டர் விசித்ராமேரி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் செய்து இருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை