மாவட்ட செய்திகள்

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி 2 பேர் படுகாயம்

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

சுரண்டை,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒப்பனையாள்புரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மனைவி சமுத்திரம் (வயது 57). இவர் நேற்று காலை 10 மணி அளவில் தனது மகன் ராஜ்குமார் (34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஒப்பனையாள்புரத்தில் இருந்து சாம்பவர் வடகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சுரண்டை அருகே உள்ள குலையநேரியை கடந்து இரட்டைகுளம் விலக்கில் சென்ற போது ராஜ்குமார் மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.

இதனால் சமுத்திரம் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் ராஜ்குமாரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற இரட்டைகுளம் மேல தெருவை சேர்ந்த அய்யாச்சாமி மகன் மாடசாமி (32) என்பவரும் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சமுத்திரத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை