மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரரை காண வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் பவுர்ணமி நேற்று முன்தினம் மதியம் 12.10 மணிக்கு தொடங்கி நேற்று பகல் 11 மணி அளவில் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பகலில் இருந்து நேற்று மதியம் வரை திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

நீண்ட வரிசையில்...

நேற்று முன்தினம் மாலை 4 மணியில் இருந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதேபோல் நேற்று காலையும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கிரிவலம் சென்ற பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலுக்கு வெளி மாநிலம், மாவட்டத்தை சேர்ந்த பலர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதன் காரணமாக கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சிறப்பு கட்டண தரிசனத்தில் மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதே போல் பொது வழியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை