மாவட்ட செய்திகள்

துலா கட்டத்தில் நீர்தேக்கம் அமைக்கும் பணியின்போது காவிரி ஆற்றில் பழமையான கிணறுகள் கண்டுபிடிப்பு

மயிலாடுதுறையில், துலா கட்டத்தில் நீர்தேக்கம் அமைக்கும் பணியின்போது காவிரி ஆற்றில் பழமையான கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது

தினத்தந்தி

மயிலாடுதுறை,

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்ற பழமொழியுடன் ஆன்மிக நகரமாக மயிலாடுதுறை திகழ்கிறது. குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும்போது துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை காவிரி ஆற்றில் துலாகட்ட பகுதியில் காவிரி புஷ்கரம் திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பொதுப்பணி துறை மேற்பார்வையில் துலாகட்ட பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நிரந்தர நீர்தேக்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியின்போது காவிரி ஆற்றில் 200 ஆண்டுகள் பழமையான செங்கற்களால் கட்டப்பட்ட 9-க்கும் மேற்பட்ட கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கிணறுகளை முன்பு பக்தர்கள் புனிதநீராட பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது. பொதுப்பணி துறையினர் இந்த கிணறுகளை சேதப்படுத்தாமல் பணி செய்து வருகின்றனர். மேலும், கிணறுகளை தூர்வாரி அதில் மீண்டும் மணலை நிரப்பப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் தேங்கும் நீர் கிணற்றிலும் தேங்கி நிலத்தடிநீரை பாதுகாக்கும். புஷ்கரம் விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள், இந்த கிணறுகளின் ஊற்றுகளில் இருந்து வரும் தண்ணீரை நீராடுவதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும், துலாகட்ட பகுதியில் காவிரி ஆற்றின் நடுவே இருக்கும் பிரதோஷ நந்தியை சுற்றிலும் உள்ள கிணறுகளுக்கு அடையாளமாக கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற பெயர்களை விழா குழுவினர் வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை